Author Topic: ஆசையாய் ஒரு கனவு  (Read 597 times)

Offline JasHaa

ஆசையாய் ஒரு கனவு
« on: November 15, 2018, 11:55:55 PM »
￰அன்றொரு இரவினில்  ஆழ்மனதின்   ஆசையாய் ஒரு கனவு 
விடியும் பொழுது எனது ஜென்ம  நாளாம்....
மனதினில்  சிலென்று  ஒரு உணர்வு 
ஒரு வேளை   பசிதீர்க்க  கழனியில் களை எடுக்கும்  என் ஆத்தா  ...
பானையை   வழித்து குடுத்து  பட்டினியில்  தூங்கும்  புண்ணியவதி ....
நாளெல்லாம்   மாடாய்   மூட்டை  தூக்கும்
என் அப்பன் 
கள்ளுக்கடையில்   மொய்யெழுதும்  அரசானவன்....

￰அன்றொரு இரவினில்  ஆழ்மனதின்   ஆசையாய் ஒரு கனவு 
எம்குடிசையில்  எது  குறையோ இல்லையோ 
மக்கட்செல்வத்துக்கு இல்லை  ...
கனவுகளுக்கும்  பஞ்சமில்லை 
முதிர்கன்னியாய் ராஜகுமாரனை  எதிர்நோக்கும்  அக்கா
ஏர் உழும்  எருதாய் உழைக்கும் 
தொப்புள்கொடி  உறவுகள் 
ஒன்றல்ல ரெண்டல்ல  மூனுன்று....
மூன்று  நூறை    கூலியை முப்பது  நூறாக  சூதாடும்  கடமை  வீரர்கள்  ...

அன்றொரு இரவினில்  ஆழ்மனதின்   ஆசையாய் ஒரு கனவு 
 ஜென்ம  தினத்தில்  கிழிசல்  இல்லாத சட்டையும் , அரிசி  சோறும்  திங்க
ஆசையாய் கனவு ....
ஏழ்மையின் வலி ....
கனவினில்  தாக்கம்  ...
ஆம், ஏழையின்  கனவு கூட பரிந்துரைக்க  படுகிறது  ....
தடை  செய்யப்பட்ட  பகுதியென  ....

Offline gab

Re: ஆசையாய் ஒரு கனவு
« Reply #1 on: November 16, 2018, 12:26:53 AM »
கவிதை அருமை . தொடர்ந்து கவிதைகளை படிக்க ஆர்வமாக  இருக்கிறோம் .