வாழ்த்தும், இப்பொது பார்ப்பதும்.,
வேலையோ..! மென்பொருள் நிறுவனம்..,
முதல் நாள் வியந்தேன்- வானுயர்த்த கட்டிடங்கள்..
கண்ணாடி முகப்புகள் என பற்பல..!
சிலநாள் கழிந்தது- பல துயரம் தெரிந்தது
வண்ணமிகு விளக்கில் ஜொலிக்கும் உணவு கூடம் முதல்..
அனைத்தும் முடிந்து அழகை சரி செய்து கொள்ளும் கழிவறை வரை..
கைகளை கழுவி விட்டு துடைக்க tissue paper -ஐ எடுகின்றனர்
மும்முரமாய் பேசிக்கொண்டே global warming-ஐ பற்றி
நியாபகம் வரும்..,எழுத நோட்டுகள் இல்லாமல்
வருந்தும் எந்தன் ஊர் பள்ளி சிறுவன்..,
சிரித்துகொண்டே நகர்வேன் அவர்களை பார்த்து..!
குடிபதற்கு இங்கு minaral water..,
பிடிப்பது முழுவதும்..! குடிப்பது பாதி..! கொட்டுவது மீதி..!
நியாபகம் வரும்., குடிக்க தண்ணீர் இல்லாமல்
எங்கள் ஊர் பெண்களின் குழாயடி சண்டை ..!
சிரித்துகொண்டே நகர்வேன் அவர்களை பார்த்து..!
உணவு கூடம்..,இங்கு உண்பதற்கு பல வகை..,
வாங்குபவர்.,உண்பது பாதி..,எரிவது மீதி ..
நியாபகம் வரும், ஏறிய மனம் இல்லாமல் உண்ணும்
என் அண்ணையின் காலை உணவாய்.,நேற்று செய்து மிஞ்சிய பழைய சாதம்..!
சிரித்துகொண்டே நகர்வேன் அவர்களையும் பார்த்து..!!
என் நெஞ்சில் வடுவாய் நின்றது..?கண் எதிரே பார்த்தேன்..?
ஓங்கி நிற்கும் அலுவலக கட்டிடத்தில் அழகாய் ஒரு தேன் கூடு..!
அதுவரை நான்கான பெரும் கூடு..!!
அதை கண்டு ரசிதுகொண்டிருந்த நேரம்..,உயரதிகாரியின் குரல்..,
அந்த தேன் கூடல் கட்டிடத்தின் அழகு கெடுகிறது கலைத்து விடுங்கள் என்று..
அப்போது பலரது யோசனை- தீ பந்தம் காட்டலாம்.,
கல்லால் அடிக்கலாம் .., விசபொடி தூவலாம் என்று..,
இறுதி முடிவாய் கலைத்தனர் .,விசபொடி தூவி..,!
நியாபகம் வந்தது .,பூக்களை பறிக்காதே அண்ணா..?தேனிக்கள் பாவம்
என்று சொன்ன என் தங்கையின் குரல்..!!
சிரித்துக்கொண்டே நகர்ந்தேன் அவர்களையும் பார்த்து..!!
நாளையும் போகவேண்டும் சிரித்துகொண்டே ..!!
இப்போதெல்லாம் எனக்கு
அழுகையே...., சிரிப்பாய்....,!!