குப்பை போடும் இடத்தில
\"அநாதை\" குழந்தை !
எச்சில் இலைக்கு
சண்டை போடும்
எதிர்கால இந்தியாவின் தூண்கள் !
போதையில் பேதையாகி
சாலையில் சாகசித்து ,
காதலில் தம்மோடு
பிறரையும்
சாகடிக்கும் இளைஞர்கள் , இளைஞிகள் !
பெற்றோரை புறம்தள்ளி
நாகரிக வாழக்கையை நேசித்து
சொந்தங்களை
இழந்து தவிக்கும்
குடும்பவாசிகள் !
பெரிய பொறுப்புகளை
மறந்துவிட்டு ,
சின்ன திரை சீரியல்களுக்குள்
தங்களையே
துளைத்துவிட்டு ,
குடும்பத்தை கோட்டைவிட்ட
குடும்பஸ்திரிகள்!
சம்பளம் போதாமல்
கிம்பலத்தில் ஆட்டம் போட்டு
ஆயிரங்களை ஓரம்கட்டி
கோடியில் புரளும்
அரசு ஊழியர்கள் !
பொதுநலம் துளைத்து
சுயநலம் தேடும்
சுகபோக
அரசியல்வாதிகள் !