அன்பும் அடக்கமும் அமைதிக்கு அழகு
பண்பும் பணிவும் பதவிக்கு அழகு
உண்மையும் நேர்மையும் உயர்விற்கு அழகு
மன்னித்து மறப்பது உறவிற்கு அழகு
தேடிக் கற்றல் கல்விக்கு அழகு
தியாகம் உள்ள சேவை அழகு
முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு அழகு
முன்னுதாரணம் தலைமைக்கு அழகு
இத்தனை அழகும் உன்னில் இருந்தால்?
உண்மையில் நீ தான் உலகிலேயே அழகு
Naan rasitha kavithai