பூவும் நீயே பூவையும் நீயே
நீ பூச்செடியாக மாறு
உன்னைப் போல அழகான
பூக்கள் பூக்கும்
வேறு செடி
உலகில் வேறு ஏதும் இல்லை
பூவை பறித்தவுடன்
பெண்ணாக மாறிவிடு
நான் பூச்சூடிவிடுவதெற்கேற்ற
உன்னைப் போல வேறு
அழகிய பெண்
உலகில் வேறு யாரும் இல்லை
என் இதயம்
நீ தட்டாங்கல்லை
தூக்கிப்போட்டு பிடிக்கும் போது
தவறி விடுகிறதா
கவலையை விடு
நீ எங்கு தூக்கி வீசினாலும்
உன் கைக்குள்ளேயே
வந்து விழும்
இதோ
என் இதயம்
பட்டாம்பூச்சி
பறந்து கொன்டிருந்த
பட்டாம்பூச்சியை பிடிக்க
தாவிச் சென்றாய்
பட்டாம்பூச்சியின் வர்ணங்கள்
உன் விரலில் பதிந்து விடும்
என பயந்தேன் நான்
உன் வர்ணம்
அதன் மேல் ஒட்டிக் கொள்ளும்
என பயந்ததாலோ என்னவோ
பட்டாம்பூச்சியே உன் கையில்
வந்தமர்ந்தது