Author Topic: என்னைத் தெரியுமா???  (Read 728 times)

Offline thamilan

என்னைத் தெரியுமா???
« on: October 18, 2018, 01:23:28 PM »
பத்து மாதமேனும்
என் பரிசுத்த நிம்மதிக்கு
சொர்க அறை  தந்த
தாயிடம் கேட்க  வேண்டும் 
என்னைத் தெரியுமா என்று

வாழ்வெனும் வாழ்க்கை ஓடத்தின்
வழிபாதைகளை
அக்கறையாக செப்பனிடும்
அப்பாவை கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று

என் மோக அனல் மூச்சில்
முழுச் சுவாசம் தேடி
என்னை பிரித்தெடுக்கும்
பெரு  முயற்சியில்
சரிபாதி பங்கெடுக்கும்
என் இல்லாளைக் கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று

கூத்தாடும் குரங்கு  மனதை
தொட்டு அதட்டியும்
நில்லென்று நிலைப்படுத்தும்
நண்பர்களைக் கேட்க வேண்டும்
என்னைத் தெரியுமா என்று

ஏனெனில்
என்னை எனக்கே தெரியாமல் 
எண்ணற்ற ராத்திரிகள்
ஞான விளக்கேற்றி
விடைதேடி இருக்கிறேன்

இருந்தும்
இன்னமும் எனக்கு
பனிமூடிய பேருண்மை தான் 

Online Evil

Re: என்னைத் தெரியுமா???
« Reply #1 on: October 19, 2018, 10:13:14 AM »


தமிழன் மச்சி மிகவும் இனிய  கவிதை இது போன்று என்றும் உங்கள் கவிதை பயணங்கள் தொடரட்டும் என்றும் என்றென்றும் வாழ்த்துக்கள்

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால