Author Topic: உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை  (Read 314 times)

Offline Ayisha

உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை



இந்த முத்திரை உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.

உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை
செய்முறை :

கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தரவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ளவும்.

இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்துகொண்டு 15 நிமிடங்கள் பயிற்சி செய்தால் உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும், மன அழுத்தம் குறைக்கும். அதிக கொழுப்பு உண்டாவதை கட்டுப்படுத்துகிறது.

அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.