Author Topic: நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் முகப்பரு, கரும்புள்ளி வர காரணமா இருக்குன்னு ...  (Read 446 times)

Offline Ayisha

  • Golden Member
  • *
  • Posts: 2513
  • Total likes: 799
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ✤ Loneliness Is Beautiful And Empowering ✤
நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் முகப்பரு, கரும்புள்ளி வர காரணமா இருக்குன்னு தெரியுமா?



சருமத் துளைகளில் ஏற்படும் அடைப்புக்களால் தான் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் நாம் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்களாலும் சருமத்துளைகளில் அடைப்புகள் அதிகம் ஏற்படும் என்பது தெரியுமா?

இங்கு சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தும் நாம் செய்யும் சில தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் முகத்தில் அடிக்கடி வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடுபடுங்கள்.

பருக்களை நசுக்குவது முகத்தில் பருக்கள் வந்தால், அதை சிலர் கை விரலால் நசுக்கி, கிள்ளிவிடுவார்கள். இப்படி செய்தால், அதில் உள்ள சீழ் முகத்தின் மற்ற இடத்தில் பட்டு, முகப்பரு அப்படியே பரவ ஆரம்பித்துவிடும். எனவே இப்பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.

மேக்கப்பை நீங்காமல் இருப்பது இரவில் படுக்கும் முன் முகத்தில் போட்டிருந்த மேக்கப்பை தவறாமல் நீக்க வேண்டும். இல்லாவிட்டால், சருமத் துளைகளில் அடைப்புக்கள் ஏற்பட்டு, பருக்களால் அதிக அவஸ்தைபடக்கூடும்.

தவறான மேக்கப் போடுவது முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கு கன்சீலரைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த கன்சீலர் சருமத் துளைகளை அடைக்கும் என்பது தெரியுமா? மேலும் சருமத்திற்கு ஏற்ற மேக்கப்பைப் போடாமல் தவறானதை தேர்ந்தெடுத்துப் போட்டாலும், அது சருமத் துளைகளை அடைத்து, பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

முகத்தைத் தொடுவது கண்ட கண்ட இடங்களில் கையை வைத்துவிட்டு, முகத்தை அடிக்கடி தொட்டால், கையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் சருமத்தைத் தாக்கி, அதுவே சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சருமத்தை சுத்தம் செய்யாதது வாரத்திற்கு ஒருமுறையாவது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை கிளின்சர் பயன்படுத்தி நீக்கிவிட வேண்டும். இதனால் அழுக்கள் மற்றும் எண்ணெயால் சருமத் துளைகள் அடைக்கப்படுவது தடுக்கப்படும்.