பொதுவாய் பகுத்தறிவை வகுத்தெறியும்
எந்த ஒரு விஷயமானாலும்
அதை, பகுதி வாரியாய் வகுத்து ,
வகுத்ததை வரிவரியாய் தொகுத்து
வைத்தாலும், அத்தொகுப்பில்
ஒன்றில் கூட உமியளவும் உடன்பாடற்றவன் நான் .
அப்படிப்பட்ட நானே ,உன் அழகான, அன்பான
அசத்தலான காதலை கண்டும் ,கொண்டும்
ஜெனமங்கள் என்பது உண்மைகளாய்
இருக்குமோ??? எனும் எண்ணம் கொள்கிறேன்
சிலகாலமாய் .....
முன்ஜென்மம் ,பின்ஜென்மம், பின் வரும்
பதின்மூன்று ஜென்மங்களுக்கும் சேர்த்து
இந்த ஜென்மத்திலேயே காதலிக்கும்
உன் காதல் , உண்மை காதல் போல்
உன்னத காதல் கிட்டினால்
தி.க, மூ .க போன்ற
கொள்கை குன்றுகளே குடைசாயும்
நன் என்ன சிறு காளான் குடை !