கவிதை நன்று ... காதல் இதயத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது நிஜத்தில் ?
காதல் நிஜம்..
இதயம் நிஜம்
வாழ்வு நிஜம்
இருப்பது நிஜம்
இப்படி எல்லாம் நிஜ மயமாய் இருக்கும்பொழுது
நிஜத்தில் ?? எனும் கேள்வி
எனக்கென்னவோ பயத்தின் பயமாகவும் ,
அப்பயத்தின் வெளிபாடாகவுமே தோன்றியது
ஆதலால்தான்
பதில் தராமல் மௌனமாய் இருந்தேன்.
நான் காக்கும் மௌனம் உண்மையான
மென்மையான ,மேன்மையான என் காதலுக்கு
அவப்பெயர் தருமோ எனும் கலக்கத்தால்தான்
இந்த பதிலே தவிர பிரிதொன்றும் இல்லை !