Author Topic: திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்  (Read 6478 times)

Offline Global Angel

திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்


ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.

ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.

இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.