மச்ச ஜாதகம் பெண்களுக்கு
ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.
நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.
நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.
மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.
மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.
மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.
இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.
கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.
தலையில் மச்சம்
தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
ஆடம்பர வாழ்வு நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.
கன்னத்தில் மச்சம் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.
இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.
கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
அந்தஸ்து மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.
காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.
நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.
கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.
இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.
மார்பில் மச்சம் பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.
நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.
முதுகில் மச்சம் கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.
பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.
தொடை இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.
இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.
ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.