Author Topic: பிறந்த நாளுக்கேற்ற வர்ணம்  (Read 7291 times)

Offline Global Angel

பிறந்த நாளுக்கேற்ற வர்ணம்

உங்க நிறம் எந்த நிறம்


நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!
 
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.

 
04.03.1981= 0+4+0+3+1+9+8+1
 
=26 (2+6)
 
=8

 
8 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)
 
உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் நடத்தையையும் சொல்லிவிடுமாம்.
 
அதன் படி....
 
1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.
 
2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.
 
3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷமானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.
 
4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.
 
5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.
 
6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.
 
7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத் திறன் அதிகம் இருக்கும்.
 
8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.
 
9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.