Author Topic: அண்ணா  (Read 848 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
அண்ணா
« on: May 18, 2018, 01:48:56 PM »
எட்டு  ஆண்டாகியும்
உன் ஒருதுளி நினைவும்
என்னை விட்டு அகலவில்லை
அண்ணா

இறுதியாக நீ கொடுத்த
முத்தத்தின் ஈரம் காக்கும்
முன்னே உன்னை என்னிடம் இருந்து
பிரித்த இந்த விதியை என சொல்வது

என்னை விட்டு படிக்க தொலைதூரம்
சென்றாய் திரும்பி வருவாய் என்ற
நம்பிக்கையில் வழி அனுப்பிவைத்தேன்
ஆனால் திரும்பி வந்து நீ இல்லை என்ற சேதி மட்டுமே

உறவுகளுக்கான  கண்ணீர் அஞ்சலியில்
நீ உன் இரத்தத்தால் அஞ்சலி செய்தாய்
எல்லோரையும் மனிதனாய் மதித்த
உன்னை சிங்கள ராணுவம்
காலால் மிதித்தது தான் தாங்க முடியவில்லை

உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது கூட
குற்றமாயிற்று  இங்கு
இறுதி வரை உன் உடலை காணாத அம்மாவின் ஓலம்
இன்னும் என் காதுகளில்

நீ இல்லை என்றாலும் உன் நினைவுகள்
என்னை சுற்றியே இருக்கும்
 

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அண்ணா
« Reply #1 on: May 18, 2018, 03:12:25 PM »
வலி நிறைந்த வரிகள்

என்னிடம் வார்த்தைகள் இல்லை ..இறைவன் காக்கட்டும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "