காதல்
ஒரு பூ பூப்பது போல
மெதுவாகத் தான் மனதுக்குள்
பூக்கும்
காதல்
ஒரு சுனாமி போல
ஒரு பார்வையில் ஒரு மோதலில்
திடீரென மனதுக்குள்
நுழையும்
காதல்
ஈரமணலில் காலடித் தடம் போல
வந்து போனாலும்
காலடித் தடத்தை
விட்டுப் போகும்
காதல்
பிரசவிக்கும் குழந்தை போல
துன்பத்தை கொடுத்தாலும்
அந்த துன்பமே
இன்பமாக மாறும்