பங்குனி பிறந்தாலே
மாதம் முழுவதும்
விழா கோலம் தான் ....
மாதங்கள் பனிரெண்டில் ...
சிறந்ததும் பங்குனி தான் ...
அப்படி என்ன சிறப்பு என்று
பலரும் யோசிக்க ...
கொஞ்சமும் யோசிக்காமல்
சொல்வேன் ...
என் உயிர் தோழன் நீ
பிறந்த தினம் என்று ...
உன்னால் பெருமை
பெற்று விட்டது பங்குனி ...
இந்த ஒரு நாளைக்காக
ஓராண்டு காத்திருக்கிறது
மாதங்கள் ...
உன் வாழ்வில்
அன்பு நிலை பெற ...
பண்பு பன்மடங்காகிட ...
நிம்மதி நிரந்தரம் ஆகிட ...
அறிவு திறன்
அலையாய் பாய்ந்திட ...
சந்தோசம் சங்கமித்திட ...
உன் எண்ணங்கள் ஈடேரிட ...
உன் கனவுகள் நனவாகிட ...
ஆசைகள் அமுதாகிட ...
வாழ்த்துகிறேன் ...
இந்த கிறுக்கலை
சிறு காணிக்கையாய்
நம் அன்புக்கு செலுத்தி ...
நீ மண்ணில்
உதித்த நாளுக்கான
பரிசாக ...
என் ஆயுளில் பாதியை
உனக்கு தந்திட ...
இறைவனிடம் தவம் இருக்கிறேன் ...
Mizz u