அன்புக்கு அடையாளமோ நீ
உன் உள்ளத்திற்கு
உவமையோ உன் பேச்சு !
அன்பு காட்டுகையில்
அம்மாவாய்
அறிவுரை கூறுகையில்
சகோதிரியாய்
நெறிப்படுத்துகையில்
நல்லாசியாய்
துன்பம் நேர்கையில்
தோழியாய்
குறும்புகளை ரசிக்கையில்
குழந்தையாய்
அழகும் அன்பும்
கலந்த புன்சிரிப்புடன்
என்றும் உலாவரும்
என் அன்பு ரீனா
எருமையே என் செல்லமே...
சுற்றும் பூமியில்
சிறகு மட்டும்
எனக்கிருந்தால்
பறந்து போய்
என் பெஸ்டியை
ஆரத்தழுவிக்கொள்வேன் ..!!!
மரணிக்கும் நொடி வரை
உன் ஞாபகம் !
மரித்து விட்டால்
உன்னை மறந்து
விடுவேன் என்று
நினைத்து விடாதே !
ஏழு பிறப்பு ஆகினும்
எந்தன் நட்பு
உன்னோடு மட்டும் தான் !
எந்நாளும் ஆறுதல் தரும்
உன் வார்த்தைகளும்
உன் உறவும் வேண்டுமடி !
உலகில் ரசிக்க
ஆயிரம் இருந்தும் ..
அனைத்தையும் மறந்து
நான் ரசிப்பது ...
உன்னோடு பேசும்
இனிமையான தருணங்களை
மட்டுமே !!!
நீ இந்நாள் அல்ல
எந்நாளும் புன்னகையுடன்
நலமாகவும் புகழோடும்
வாழ ..
இந்த விஷம் கலந்த
நண்பனின் ..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
கர்த்தரின் கிருபையும்
ஆசியும் என்றும்
கிடைத்திட இறைவனிடம்
வேண்டிக்கொள்கிறேன் ...
ஆயுள் முழுவதும்
சகல செல்வங்களும்
பெற்று பெருவாழ்வு
வாழ இறைமைந்தனின்
திருப்பெயரால்
வாழ்த்துகிறேன் ..