Author Topic: வேதனை  (Read 947 times)

Offline Guest

வேதனை
« on: March 13, 2018, 11:23:48 AM »
திருப்பிச் செல்ல விரும்பிடாத
தொலைவிற்கு
அழைத்துச் சென்றிட்ட பின்னால்

கோர்த்திருந்த கைகள் விடுத்து
சோம்பல் முறித்து
முன்னோக்கி செல்கிறாய்

கொஞ்சம் தவித்து தான்
போகிறேன்

பின் தொடர்வதா இல்லை
திரும்புவதா என

நீயும் உணர்ந்து தவிக்கக் கூடும்
என்றேனும்
என் இருப்பில்லா வெறுமையை 
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ