அறிவு இருக்க !
லூச்சு மட்ட !
பொறுப்பே இல்ல கொஞ்சமும் !
ஓடிடு !
கொழுப்பு கொழுப்பு கொழுப்பு உடம்பு முழுக்க கொழுப்பு !
உன் இஷ்டத்துக்கு இருக்க !
என்ன பார்த்த மெண்டல் மாதிரி இருக்க !
இனி உன் பேச்சு கா கா கா !
சாகீமா எங்க போன !!
உன்னுடைய இந்த
வார்த்தைகள்
தினமும் என் உறக்கத்தை
கொன்று தின்கிறது
என் உணர்வுகளை
தட்டி எழுப்புகிறது
உன் விரல்களோ
என்னை தீண்டவில்லை
உன் கண்களோ
என்னை சிறை எடுக்கவில்லை
உன் உதடுகளோ
என்னிடம் பேசவில்லை
உன் மூச்சோ
என் மூச்சுடன் கலக்கவில்லை
எங்கயோ இருந்து கொண்டு
என் உணர்வுக்கு
உயிர் தரும் உன்னை
நான் என்ன வென்று கூறுவது
ஈர்ப்பரசிஎன்று தான் சொல்லவேண்டும் ....