Author Topic: ••பாதரச ஆயுளில் வளரும் கண்ணாடி••  (Read 694 times)

Offline Guest

பாதரச ஆயுளில் வளரும் கண்ணாடி

என்னோடு நெடுங்காலமிருந்த அஃது
எப்போதுமே பொய்களை விரும்பியதில்லை

அழுத போது அழவே செய்தது
சிரித்த போது சிரிக்கவே செய்தது

முகம் பார்த்த போதும்
சிகையலங்காரத்தின் போதும் மட்டுமல்ல
நேரம் காலமின்றி
என்னோடே இருந்ததது

கோபம்
அன்பு
வலி
என
ஒவ்வொரு உணர்வையும்
துல்லியமாய் காட்டியது அஃது

எதிர்பாரா தருணம்
அந்த கண்ணாடி
விழுந்து நொறுங்கி சிதறிய போது
பதறியபடியே நுள்ளியெடுத்தேன்

கைகளில் இறங்கிய ஆழத்தை விட
ஆயுளில் படர்ந்த பாதரசம்
துண்டு துண்டாய் சில்லு சில்லாய்
கண்ணாடியாகவே வளர்கிறது
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ