Author Topic: ★எலும்புக்கூடுகளின் கல்வெட்டு★  (Read 885 times)

Offline Guest

★எலும்புக்கூடுகளின் கல்வெட்டு★

மனைகளாய் விரிந்துக் கிடக்கிறது
பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்

பாரம் ஏற்றப்படும் கற்களில்
உடைந்துக் கிடக்கிறது
மலையொன்றின் தொன்மங்கள்

வாகன நெருக்கத்தில்
சதைப் பிளந்து காட்சியளிக்கும்
சாலைகளிடையே
மண்டையோட்டின் ஓவியங்கள்

குடிநீர் பற்றாக்குறையிலும்
வெட்டுருவிற்கு பாலூற்றும்
அடிமைகளின் அணிவகுப்பில்
நடிகர்களின் அரியாசனங்கள்

போதை வருமானமும்
செரிமானிக்காத ஊழல் உணவிலும்
வேதாந்தம் பேசும் அரசியல்வியாதிகளாய்
உலகவங்கியின் கடன் சுமைகள்

எலும்புக்கூடுகளில்
விலைவாசியின் கல்வெட்டுக்களை
செதுக்கிக் கொண்டிருக்கும்
உழவர்குல நடைபிணங்கள்

நாட்டின் சாபக்கேடாய்
முதுகெலும்புடைந்த
எழுத்தாணிகளின் படிமக்கூறுகள்
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
யதார்த்தம் அறைகிறது உங்கள் வரிகளில்

தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் சகோ

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "