Author Topic: காலமாகாத காதலொன்று..!  (Read 1277 times)

Offline Guest

காலமாகாத காதலொன்று..!
« on: February 13, 2018, 05:06:07 PM »
காலமாகாத காதலொன்று..!

அவள் கழற்றிக் கொடுத்த மோதிரத்தில்
கைரேகையின் நுண்ணிய வியர்வை படிமக்கூறுகள்
இன்னும் காயாமல் கதைகள் பேச..

வறண்ட காற்றொன்றின் கண்ணீர் கசிவுகள்
பிரிவின் வேதனையை பாடிச் செல்கிறது .

அவனுக்கென்றிருந்த மனிதர்களின் வேசம் கலைந்தபோது
ஓடிக்கொண்டிருக்கும் கடிகார முட்களில் குத்தி கிழிபடுகிறது
காலமாகாத காதலொன்று அனாதையாய் !..

சுயநலம் பீறிடும் இருப்பின் காட்சிகளில்
மயங்கி நிற்கும் மனங்களெல்லாம்
என்றேனும் ஒருநாள் பார்க்க கூடும்..

அன்பெனும் அம்புகள் விஷம் தோய்த்து ஏவப்பட்டதில்
பனிக்கட்டி இதயங்கள் சுக்கு நூறாய் நொறுங்கி கிடப்பதை..!!!
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: காலமாகாத காதலொன்று..!
« Reply #1 on: February 13, 2018, 06:04:45 PM »
சகோ

அருமையான வரிகள்
தங்களின் முதல் பதிவு சிறப்பு
நிறைய எதிர்பார்க்கிறோம்

வாழ்த்துக்களுடன்
ஜோக்கர்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: காலமாகாத காதலொன்று..!
« Reply #2 on: February 13, 2018, 10:07:13 PM »
Phaahhh.. Dokkuu semma.. intha mugatha na ethir pakkave ilayee.. Keep going Dokkuu...

Offline சாக்ரடீஸ்

Re: காலமாகாத காதலொன்று..!
« Reply #3 on: February 14, 2018, 12:13:31 PM »
dokku semaiya iruku po...inga smly varala irunthalum ...lochak pachak mochakkkk ...