
1957 ஆம் ஆண்டு Dorothy Counts என்ற கறுப்பின மாணவியின் முதல் நாள் அனுபவம், இது நடந்தது அமெரிகாவில் Harry Harding High Schoolஎன்ற உயர் பாடசாலையில். அப்பாடசாலையில் சேர்க்கப்பட்ட முதல் கறுப்பின மாணவர்களில் இவரும் ஒருவர், அவளை ஆங்கில மாணவர்களால் தொல்லைக்குள்ளாகும் காட்சி.

January 12, 1960 ஜப்பானிய சோசலிச கட்சியின் தலைவராக இருந்த Asanuma என்பவர் ஒரு எதிர் மாணவனால் கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்.

1963 தெற்கு வியட்நாமில் Thich Quang Duc என்ற பெளத்த துறவி , அரசாங்கத்தின் கொடுமைகளை எதிர்த்து தீக்குளிக்கும் காட்சி, எரியும் பொது இந்த துறவி அசையவுமில்லை எந்தவொரு சத்தமும் போடவில்லை. ( இங்கயும் இருக்கிறாய்ங்க கொஞ்சபேர், புத்தர் வந்தாலும்வெடிதான் )

1965 அமெரிக்க குண்டுத்தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக தெற்கு வியட்நாமில் ஒரு ஆற்றை கடக்கும் தாயும் லாரில் . ( இங்கு ஒரு கடலையே/ சமுத்திரத்தையே கடந்தார்கள் )

1966 இறந்த ஒரு வியட்கொங் போராளியை அமெரிக்க துருப்புகள் கட்டியிழுத்து செல்லும் காட்சி

February 1, 1968 வியட்கொங் போராளி என்று சந்தேகப்படும் ஒரு இளைஞனை தெற்கு வியட்நாமின் போலீஸ் உயரதிகாரி Nguyen Ngoc Loan சுட்டுக்கொல்லும் காட்சி. (சர்வ சாதாரணம் )

1973 சிலியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட Salvador , இராணுவ புரட்சியின்போது கொல்லப்படுவதற்கு சில நிமிடங்கள் முதல்

1980 உகண்டாவில் பட்டினியால் சாகப்போகும் ஒருகுழந்தை ……வேறு வார்த்தைகள் வேண்டுமா ?

1982 லெபனான் பெய்ரூட்டில் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய அகதிகள்

1992 சோமாலியாவில் பட்டினியால் இறந்த தனது மகளினை கையில் ஏந்தியிருக்கும் தாய்.

1994, Tutsi போராளிகளுடன் பேசியதாக சந்தேகிக்கப்பட்டு இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட ஒருவர்.

1996 அங்கோலாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.

2001 இறந்துபோன ஒரு ஆப்கானிய அகதிக்குழந்தையின் உடல், இறுதி வணக்கத்துக்காக பாகிஸ்தானில் தயார்படுத்த படுகிறது.

2003 தனது குழந்தையை ஆறுதல் படுத்தும் ஒரு ஈராக்கிய கைதி.