உறவை விட
உயர்ந்தது நட்பு
உறவு நம்மேல் திணிக்கப்படுவது
நட்பு நாமே தேர்ந்த்தெடுப்பது
நல்ல நட்பு
நல்ல ஒரு நூல் போன்றது
நல்ல நூல்கள் படிக்கப் படிக்க
மனதுக்கு மகிழ்வூட்டும்
நல்ல நட்பும் அப்படியே
நல்ல நூல்கள்
அறிவூட்டும், நல்வழி காட்டும்
நல்ல நட்பும் அப்படித்தான்
நல்ல நட்பு
கண்ணாடி போன்றது
கண்ணாடி முகஸ்துதி செய்வதில்லை
நம் முகத்தை அப்படியே காட்டும்
அதில் அழுக்கிருந்தால்
அதை அப்படியே காட்டும்
நல்ல நட்பும் அப்படியே
போலி நட்பு நிழல் போன்றது.
வெளிச்சம் இருக்கும் வரை
அது நம்மைத் தொடரும்
இருள் வந்துவிட்டால் அது
நம்மை விட்டகலும்
நல்ல நண்பனை
உயிர் நண்பன் என்றழைக்கிறோம்
அது தவறு என்பதே என் கருத்து
உடல் நன்றாக இருக்கும் வரை
கூட இருந்து அனுபவிக்கும் உயிர்
அந்த உடலுக்கு தீங்கு வந்துவிட்டால்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடி விடும்
நல்ல நண்பன் என்றும் கூட இருப்பான்
அரைத்த கையை மணக்கச் செய்யும்
சந்தனம் போல
உதைத்த காலுக்கு செருப்பாய் இருப்பவனே
உத்தமமான நண்பன்