Author Topic: சம்மதம் எனக்கு  (Read 1717 times)

Offline thamilan

சம்மதம் எனக்கு
« on: January 29, 2018, 12:04:07 AM »
காதலி ........
நெற்றியில் பொட்டாக மட்டுமல்ல
உன்  இடையில் பாட்டாக இருக்கவும்
சம்மதம்
உன் மானத்தைக் காப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சியே

உன் கீதங்களாக மட்டுமல்ல
உன் பாதங்களாகவும் இருக்கவும்
சம்மதம்
உன்னை சுமப்பதில்
எனக்கு  சுகமே

உன் கண்ணாக மட்டுமல்ல
நீ மிதிக்கும் மண்ணாகவும் இருக்க
சம்மதம்
உன் ஸ்பரிசம் படுவதில்
பரவசமே

உன் பகலாக மட்டுமல்ல
இரவாகவும் இருக்க
சம்மதம்
அது
நானுன்னை கனவில் சந்திக்கும்
நேரமல்லவா

மேலணியாக மட்டுமல்ல
உன் காலணியாகவும் இருக்க
சம்மதம்
உன் எதிரிகளை
எதிர்க்கின்ற ஓர் ஆயுதமாக இருப்பதில்
ஆனந்தமே 

Offline MaSha

Re: சம்மதம் எனக்கு
« Reply #1 on: January 29, 2018, 02:52:28 PM »
Thamilannnn

என்ன ஒரு காதலன்! அடடா அடடா உங்க காதலி அதிர்ஷ்டசாலி

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: சம்மதம் எனக்கு
« Reply #2 on: February 01, 2018, 11:28:29 AM »
இப்படி ஒரு காதலன் ..
அக்காதலனின்  காதல்
கிடைப்பின் ...
அக்காதலை  ஏற்க
எல்லாம் பெண்களுக்குமே
சம்மதம் ....!!!

அழகான கவிதை தமிழன் ...
வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் கவிப்பயணம் !!!
நன்றி !!!