Author Topic: உன்னால் பார் ..!  (Read 523 times)

Offline சாக்ரடீஸ்

உன்னால் பார் ..!
« on: January 19, 2018, 01:43:57 PM »
கண்டும் காணமல் போகும்
என்னை ...
விடாபிடியாய் ...
இழுத்து வம்புகள்
செய்கிறாய் ...
நான் கோபம் கொண்டு
சீறுகையில் ...
பதுவிசாய் மாறி ...
வார்த்தைகளை வீசி ...
கவர்ந்திழுக்கிறாய் ...
உன்னை கண்டிக்கவும்
தண்டிக்கவும்
முடியாமல் ...
என் இதயத்திடம்
முறையிடுகிறேன் ....
என் இதயமோ ...
மறு கணம் ...
மூளைக்கு மின் அஞ்சல்
அனுப்ப ...
என் மூளையோ ...
என் விரல்களுக்கு
வேலை கொடுத்து
கிறுக்க செய்கிறது ...
உன்னால் பார்
எத்தனை பேருக்கு
வேலை கிடைத்திருகிறது ...    ;D   ;D   ;D