அறியாமையில் வளர்ந்த சமூகம் அன்று
அறிவில் உயர்ந்துள்ள சமூகம் இன்று
ஆண்மலடு தெரியாத மனிதன் அன்று
பெண்களுக்கே உரிததென வசை பாடினான்
விஞ்ஞான வளர்ச்சியில் மலடு மறைந்து
பரிசோதனை குழாய்களில் உருப்பெறும் குழந்தைகள்
தேவை இருப்பின் குழந்தைகள் பெறலாம்
என்பதை பறைசாற்றும் உலகமிது
அன்று ஊர்வாயில் உலாவிய வார்த்தை
இன்று கூகிளில் கூட இல்லாமல் போனதுவே
கவிதை நன்று. வாழ்த்துக்கள்