எங்கும் நிறைந்திருக்கின்றன
காலடி சுவடுகள்
இன்னொரு சுவடின் மீதே
கால் வைத்து நடக்க வேண்டியிருக்கிறது
எல்லாப் பாதையிலும்
எவரேனும் நடந்திருக்கிறார்கள்
முட்களை மிதிக்கலாம் என்றால்
ஏற்கனவே அவற்றிலும்
இரத்தம் படிந்திருக்கிறது
அவரவருக்கொரு பாதை இருக்கிறது
என்பதெல்லாம்
வெறும் நிழல் வார்த்தைகளே
புதிய பாதையை உருவாக்க
பூமியில் இடமில்லை
பாதைகளை உருவாக்குவது என்பது
அவ்வளவு சுலபமில்லை
எவருடைய சுவடுகளுமற்ற
ஓரிடத்தில் என் கால் தடங்களை
பதிக்க வேண்டுமென்றால் - அது
உன் இதயம் தான்
சம்மதிப்பாயா !!!!!!