ஓ மானிடரே
வெளிச்சத்தை வெளியில் தேடுவதேன்
அகல் விளக்கொன்று
அழகாய் எரிந்திட
அவர் அவர் மனதினிலே...
மானிட வாழ்க்கை போல
இல்லையா பலாப்பழம்
முள்போல துயரங்கள்
பிசின் போல பற்றுகள்
சடை போல தடைகள்
கொட்டை போல ஆணவம்
எல்லாம் களைந்தால்
சுளை போல குணம்
உதயமென்பது விண்ணில்லை
உன் நெஞ்சினிலே!
உலகமென்பது மண்ணிலில்லை
உன் தோளிலே !
சிகரமென்பது மலையிலில்லை
உன் பணிவினிலே !!!