Author Topic: மனமெங்கும் மகிழ்ச்சியோடு..!!  (Read 851 times)

Offline Niru

கடந்து வந்த பாதைகள்
மனதிலே ரணமாய் இருப்பினும்
அவற்றின் சுவடுகளோடு
இறந்தகால கவலைகளையும்
துன்பங்களையும் களைந்து
நல்லதோர் எதிர்காலத்தை நோக்கி
தொடர்கின்றது எனது
இனிய நிகழ்காலம்..

அழகான குடும்பமதில்
அன்பை நித்தம் பரிமாறி
ஆதரவாய் தட்டி கொடுத்து
துவண்டால் தோள் கொடுத்து
கை கோர்த்து உடன் வரும்
உறவுகள்  இருப்பின்
கவலைகளும் ஒதுங்கியே செல்லும்
ஆனந்த தேன்காற்றுக்கு வழிவிட்டு..

மாற்றான் தாய் தந்தையின்
மூலம் இரத்த சொந்தமில்லா
நட்பெனும் உறவு நிழல் போல
காவலுக்கு துணை நின்று
எந்த எதிர்பார்ப்புமின்றி
கொடுத்த குரலுக்கு
விரைந்து வருகையில்
கவலைக்கு இடமிங்கு ஏது?

இவையனைத்தும் ஒரு புறம் இருக்க
மறுபுறம் இயற்கை அன்னை
தென்றலாய் தாலாட்டிட
மழைச்சரளாய் தழுவிட
என்னையே மறந்து அவள் மடியில்
இசையோடு நானும் சங்கமமானேன்
என் கவலைகள் மறந்து
மனமெங்கும் மகிழ்ச்சியோடு..


நான் பகிர்ந்துகொண்ட கதையை எனக்கு கவிதையாக மாற்றி கொடுத்த நண்பர்க்கு எனது மனமார்ந்த நன்றி  ;D

Offline JeGaTisH

Re: மனமெங்கும் மகிழ்ச்சியோடு..!!
« Reply #1 on: December 22, 2017, 01:47:19 AM »


கவிதை அழகு அண்ணா
கவிதைகள் தொடரட்டும்

Offline SweeTie

Re: மனமெங்கும் மகிழ்ச்சியோடு..!!
« Reply #2 on: December 22, 2017, 08:36:11 AM »
கன்னிக் கவிதையின் அரங்கேற்றம் பிரமாதம் .
உங்கள் கவிதைகள்  தொடர வாழ்த்துக்கள்