Author Topic: இன்னொரு ஷாஜகான்  (Read 672 times)

Offline thamilan

இன்னொரு ஷாஜகான்
« on: December 14, 2017, 07:03:00 PM »
உன்  நினைவாக
இன்னொரு தாஜ்மகால் எழுப்ப நினைத்தால்
பளிங்குக்கல் எடுப்பேன்
உன் கன்னத்தில்

அதை ஒரு ஆற்றின்
கரைதனில் அமைக்க வேண்டுமென்றால்
உளது பின்னழகில்
வளைந்து சுழன்று
ஓடிவரும் கூந்தலின் கரைதனில்
அமைத்திருப்பேன்

முன்னே ஒரு அழகிய தோட்டம்
அமைக்க வேண்டுமென்றால்
கண் திராட்சைகளையும் 
உதட்டில் மாதுளைகளையும்
இந்தப் பெண்ணில் பெற்று
அந்த மண்ணில் பயிர் செய்வேன்

அங்கே நீரூற்றுகளை
அமைக்க வேண்டுமென்றால்
உன் புன்னகை கீற்றுகள்
உடனுக்குடன் புறப்பட்டு வருவது போல
ஒரு ஓயாத காட்சியை
உருவாக்கி வைத்திருப்பேன்   

Offline JeGaTisH

Re: இன்னொரு ஷாஜகான்
« Reply #1 on: December 14, 2017, 07:48:52 PM »
அருமை அருமை தமிழன் அண்ணா
கவிதை பிரமாதம் ..கவிதைகள் தொடரட்டும்

Offline MaSha

Re: இன்னொரு ஷாஜகான்
« Reply #2 on: December 14, 2017, 07:53:22 PM »
Thamilaaannnnnnnn

Varthaigalale oru oviyam! <3

Offline SweeTie

Re: இன்னொரு ஷாஜகான்
« Reply #3 on: December 15, 2017, 12:59:54 AM »
கன்னத்தில் பளிங்கு கற்களை சுமக்கும் அந்த மும்தாஜ்   யாரோ? 
வாழ்த்துக்கள்