Author Topic: காதலுக்கு மரியாதை  (Read 690 times)

Offline SweeTie

காதலுக்கு மரியாதை
« on: December 13, 2017, 03:41:58 AM »
ஆதாரம் இல்லாமல் அணைப்பவனும்  நீயே
சேதாரம் இல்லாமல் சிரிப்பவளும் நானே 
காதோரம் பேசி களிப்பூட்டுபவன்   நீயே
மேலோட்டமாக  ரசிப்பவளும் நானே

விழியோரக் கண்ணீரில் கரைந்தவனும் நீயே
வாஞ்சையுடன் ஆட்கொண்ட  காதலியும் நானே
கொஞ்சலிலும்  கெஞ்சலிலும் மிஞ்சியவன் நீயே
வாஞ்சையுடன் வரவேற்ற ஓவியமும் நானே

விரலோடு விரலை விரயமாய் பின்னியவன்
மனதோடு மனதை  மாயமாய்  கட்டியவன்
திகட்டாத இனிப்பை இதழோரம் வழங்கியவன்
 ஒட்டுமொத்த குத்தகையாய்  அள்ளியவன் நீயே
பூர்வ ஜென்ம புண்யமாய் எண்ணியவள் நானே   

Offline JeGaTisH

Re: காதலுக்கு மரியாதை
« Reply #1 on: December 13, 2017, 06:16:03 AM »
கவிதை அருமை sweetie மா



« Last Edit: December 13, 2017, 06:17:40 AM by JeGaTisH »

Offline MaSha

Re: காதலுக்கு மரியாதை
« Reply #2 on: December 14, 2017, 10:49:38 PM »

Offline SweeTie

Re: காதலுக்கு மரியாதை
« Reply #3 on: December 15, 2017, 12:55:07 AM »
நன்றிகள்  ஜெகா மாஷா ......