Author Topic: காயம் ஆற்றும் அருமருந்து காதல்  (Read 645 times)

Offline thamilan

சென்ற முறை
அதிக நேரம் எடுத்துக் கொண்டாய்
நீ

இந்த முறை
அதிக நேரம் எடுத்துக் கொள்ளுவேன்
நானென

ஒன்றுக்கொன்று
வாக்குவாதம் செய்கின்றன

உன்னை முத்தமிட்ட எனது
மேலுதடும் கீழுதடும் !!!!


நீ
என்ன சொன்னாலும்
தலையாட்டியபடியே கேட்டுக் கொண்டுருக்கின்றன

என்னை போலவே
உன்
ஜிமிக்கிகள் !!!!!


மகிழ்ச்சியில் திக்குமுக்காடி
சிரித்து சிரித்து நுரை தள்ளியபடி
தலைக்கனத்து
ஓடிக்கொண்டிருக்கிறது
எங்கள் ஊர் வழியாக
தினமும் நீ குளிக்கும்
ஆறு !!!!!


முகம் பார்க்கும் கண்ணாடி
முகத்தை மூடிக்கொண்டது
பிரபஞ்ச அழகி
உன் பிம்பத்தைக் கண்டதுமே !!!!!

Offline AnoTH

காதல் கவிதைக்கு இலக்கணம் தாங்கள்
அருமை சகோ

Offline JeGaTisH

கவிதை அருமை தமிழன் அண்ணா
கவிதைகள் தொடரட்டும்

Offline SweeTie

எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு ..   அந்த தாதி பெண்கள் உங்களுக்கு மருந்து  ஊசி  ஏற்றுகிறேன்  என்று வேறு எதோ மருந்து கொடுத்துவிடடார்களோ  என்று  கொஞ்சம்  சந்தேகமா இருக்கு தமீழன்.   ஜெகாவை கடித்த  வைரஸ்  உங்களையும் கடித்திருக்கும்  போல தெரிகிறதே!!!      வாழ்த்துக்கள்