Author Topic: காதல் காயங்கள்  (Read 702 times)

Offline thamilan

காதல் காயங்கள்
« on: December 08, 2017, 11:43:45 AM »
மரத்தை விட்டு பறவைகள்
பறந்து போனாலும்
அதன் எச்சங்களாக
நீ என்னை மறந்து போனாலும்
என் மனதில் உன்
நினைவுகள் !!!!

ஆழ்கடலில் சுழியோடினேன்
கிடைத்தன முத்துக்கள்
அவள் மனக்கடலில்
சுழியோடி பார்த்து விட்டேன்
இன்னும் கிடைக்கவில்லை அவள்
இதயம் !!!!!

நீ ஒரு எழுத்து
நான் இரு எழுத்து
காதல் மூன்றெழுத்து
நாம் ஒன்று சேர்ந்தால்
இன்பம் நாலெழுத்து
நம் குடும்பம் ஐந்தெழுத்து !!!!!

அன்பே இது 
உனக்கு நான் எழுதும் கடைசிக் கடிதம்
படித்து முடிந்ததும் பதில் எழுது
என் முகவரிக்கு அல்ல
நரகத்துக்கு
நான் அங்கு தான் வாழ்கிறேன்
உனைப் பிரிந்து !!!!!

காதலிக்கிறேன் என்று
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நான் மரித்து விடுவேன்
காதலிக்கிறேன் என்று
இன்னொரு முறை சொல்லிவிடு
மரித்த நான்
உயிர்த்தெழுவேன் !!!!

Offline JeGaTisH

Re: காதல் காயங்கள்
« Reply #1 on: December 09, 2017, 02:49:26 AM »
தமிழன் அண்ணா எப்போவும் போல கவிதை பிரமாதம்

வாழ்த்துக்கள் அண்ணா கவிதைகள் தொடரட்டும்

Offline AnoTH

Re: காதல் காயங்கள்
« Reply #2 on: December 09, 2017, 07:16:57 PM »
காதலிப்பவர்கள் காதல் கவி எழுதுவதில்
இவ்வளவு அழகியல் இருப்பதை இன்று தான்
உணர்கிறேன்


காதலிக்கிறேன் என்று
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நான் மரித்து விடுவேன்
காதலிக்கிறேன் என்று
இன்னொரு முறை சொல்லிவிடு
மரித்த நான்
உயிர்த்தெழுவேன் !!!!


அசத்திய வரிகள்
அருமை சகோ