Author Topic: உன்னால் நான் இன்று  (Read 496 times)

Offline thamilan

உன்னால் நான் இன்று
« on: December 08, 2017, 11:13:21 AM »
நீ என்னைக் கடக்கும் போது
உன் முந்தானை நுனியில்
இழுபட்டு உன்னோடு போய் விட்டது
என் இதயம் .........

உன் பார்வை மின்சாரம் பட்டு
குருடாகிப் போனது
எனது கண்கள் .......

உன் பளிச்சிடும்
மின்னல் சிரிப்பில் செயலிழந்தது
என் இதயம்........

மொத்தத்தில் நான் இன்று
ஒரு நடைப்பிணம் !!!!