Author Topic: கொழுப்பு நிறைய இருந்தால் ஞாபக சக்தி குறைந்து விடும்!  (Read 1696 times)

Offline Yousuf

உடலுக்கு தீமை விளைவிக்கும் அதிக கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் நினைவாற்றல் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.பாரிசில் உள்ள ப்ரெஞ்ச் நேஷனல் சுகாதாரத் துறை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாரா கபாஷியன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

நடுத்தர வயதுள்ளவர்கள் இப்படிப்பட்ட பாதிப்பால் அதிகம் அவதிப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இத்தகைய பாதிப்புகள் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது முந்தைய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆய்வு ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு நினைவாற்றலை பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. ஆய்வுக்காக 55 வயதுக்கு உட்பட்ட 3486 ஆண்களும், 1341 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு தொடர் ஆய்வுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

இதில் உயர் ரத்த அழுத்தமும், அதிக கொழுப்பும் நினைவாற்றல் பாதிப்பை ஏற்படுத்தியது உறுதியாகி உள்ளது. ஆரம்ப கட்ட சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றால் இந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்பது ஆராய்ச்சியாளர்கள் தரும் உத்தரவாதம்.

Offline Global Angel



சர்க்கரை நோய் இருந்தாலும் ஞாபக மராத்தி ஏற்படுமாம் ... நல்ல தகவல்  யோசுப்
                    

Offline Yousuf


Offline Safa

safa

Offline Yousuf


Offline கார்மேகம்

கொழுப்பு நிறைய இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படும்.கொழுப்பு ரத்த குழல்களை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.மாரடைப்பு வரும். இப்படி கொழுப்பால் பல தீமைகள். மரக்கறி உணவே சிறந்தது. அசைவ உணவுகள் வாரம் ஒருமுறை எடுத்துகொள்வது சிறப்பு.

Offline Yousuf

கொழுப்பு பற்றிய அதிகப்படியான தகவல் தந்தமைக்கு நன்றி CLOUD!