விழித்தெழாதவனுக்கு விடியல் இல்லை
விழித்திருந்து கனவுகாண்பவனுக்கு விடியல் தேவையில்லை
விழிகளில் பார்வையற்றவனுக்கு விடியலே தெரிவதில்லை
நீதியற்ற அரசியலில் நேர்மைக்கு விடியல் இல்லை
நிம்மதியாய் வாழ்வதற்கு விடியல்கள் போதவில்லை
இருண்டாலும் விடிந்தாலும் நாலு காசு இல்லையென்றால்
உயர்திணை மனிதனுக்கு ஒருபோதும் விடியல் இல்லை.
ஊரும் போய் உறவும் போய் விடியலை காத்திருக்கும்
நம் தேச மக்களுக்கு கனவுகளில் கூட விடியல் வருவதில்லை