Author Topic: Nandu Fry/Varuval - நண்டு வறுவல்  (Read 451 times)

Offline DoRa

Nandu Fry/Varuval - நண்டு வறுவல்
« on: November 26, 2017, 07:36:29 AM »
தேவையான பொருட்கள்


நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு 10 பற்கள்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
புளி கரைசல் - 1 ஸ்பூன்
தேங்காய் விழுது - 1/2 கப்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு எண்ணை - தேவையான அளவு


செய்முறை


நண்டை ஓடு நீக்கி ,சுத்தம் செய்வவும்.


வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும்
கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை தலித்து,வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்க்கவும்
நன்கு வதக்கிய பின்னர் நண்டு மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடிய படி வேக விடவும்
நண்டு வெந்து கெட்டியானதும் தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள கிளறி விடவும்