Author Topic: முட்டை கட்லெட்| muttai cutlet  (Read 402 times)

Offline DoRa

முட்டை கட்லெட்| muttai cutlet
« on: November 26, 2017, 06:51:22 AM »
தேவைாயன பொருள்கள் .

முட்டை 1 
வேகவைத்த  முட்டை - 4
வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1  ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய  வெங்காயம்  - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
பொரிக்க  எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

 முட்டைகளை இரண்டாக வெட்டவும். ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து  வைக்கவும்.


 வெந்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, இத்துடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். இதனை முட்டை கலவை, ரொட்டித்தூளில் நனைத்து எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.


சுவைாயன  முட்டை கட்லெட்  ரெடி.