Author Topic: பருவ மாற்றங்கள்  (Read 716 times)

Offline thamilan

பருவ மாற்றங்கள்
« on: November 20, 2017, 09:44:10 PM »
தாயின் கருவறையில்
இருதுளி இணைந்து
உயிராய் உருவானவன் நான்

பத்தாவது மாதத்தில்
அந்த இனிய காலை சூரியனை
முதன் முதலாக பார்த்து சிரித்து

ஒரு வயதில்
மெல்லத் தவழ்ந்து 

மூன்றரை வயதில்
அழுகையும் சிரிப்புமாய்
பள்ளி சென்று

பதின்மூன்று  வயதில்
வந்த பருவை
ஆவலாய் பார்த்து

பதினெட்டு வயதில்
பருவ ஆசைகளை
மறக்கவும் முடியாமல்
மறைக்கவும் முடியாமல்
தவியாய் தவித்து

பத்தொன்பது வயதில்
பலப்பல கனவுகளுடன்
கல்லூரியில் காலடி
எடுத்து வைத்த நான்

இதோ இன்று
உன்னிடத்தில் முழுமையாய்
என்னையும் என் இதயத்தையும்
இழந்து........

Offline SweeTie

Re: பருவ மாற்றங்கள்
« Reply #1 on: November 21, 2017, 03:26:59 AM »
இன்னும் தொடருமா இந்தக் கவிதை.?    யோசிக்க  வைக்காதிங்க ..
கொட்டி தீர்த்துடுங்க.     வாழ்த்துக்கள்.