மனிதனை ஏன் படைத்தாய்
இறைவா
இறைவனைக் கேட்டேன்
மனிதனில் என்னை காணவே நான்
உன்னை படைத்தேன்
நான் உருவமற்றவன்
என்னை என்னால் பார்க்க முடியாது,
நான் மொழியற்றவன்
என்னால் எந்த மொழியும்
பேச முடியாது
அதனால் தான் மனிதனைப் படைதேன்.
அவன் நல்லவன் என்றால்
நானும் நல்லவன்
அவன் கெட்டவன் என்றால்
நானும் கெட்டவன்
ஏனெனில் மனித உடல்
வெறும் சடலம்
அதில் உயிராய் இருப்பதும் நான்
உணர்வாய் இருப்பதும் நான்
அவன் சிந்தையும் நான்
செயலும் நான்.
என்றான் இறைவன்
அப்போ நான் என்ன கெடுதல் செய்தாலும்
பழி எனக்கில்லை
உனக்கு தான்
என்றேன் நான்
இப்போ மட்டும் என்னவாம்
எல்லா பழியையும்
என் தலையில் தானே போடுகிறீர்கள்
எது எனக்கு புதுசா என்ன
என்று சொன்னான்
இறைவன்