Author Topic: நான் என்ற அகங்காரம்  (Read 1494 times)

Offline thamilan

நான் என்ற அகங்காரம்
« on: March 02, 2012, 12:15:35 AM »
அகங்காரம் என்ற கிரீடத்தை
சூட்டிக் கொள்பவன்
ராஜ்ஜியத்தை இழக்கிறான்

சுய வழிபாடு செய்பவன்
ஆலயங்களில் சாத்தான்
குடிகொண்டிருக்கிறான்

சுயநலம் என்பது
சுய இன்பத்தைப் போல‌
அருவருப்பானது என்று
நீ அறிய மாட்டாயா

நான் என்பது ஒரு கூண்டு
அதற்குள் அடைபட்ட பறவையாக‌
இருக்கும் வரை
பறந்த வானில்
பறந்து திரியும் சுகத்தை
நீ அறிய மாட்டாய்

நான் என்பது
கண்களை மறைக்கும்
இமையை போல‌

இந்த இமையை திறப்பவனே
விழித்தவன் ஆகிறான்
அவனே உலகத்தை காண்கிறான்

நான் என்பது
த‌னித்து நிற்கும் நீர்துளி
இள‌ஞ் சூரிய‌னின் மெல்லிய‌ கிர‌ண‌மே
உன்னை இல்லாது ப‌ண்ணிவிடும்

வா நாம் என்ற‌
ச‌முத்திர‌த்தில் சங்க‌மாகு
பாதுகாப்பை அடைவாய்

நான் என்ப‌து
த‌னித்திருக்கும் ஒரு ம‌ர‌க்குச்சி
இல‌குவில் ஒடித்து விட‌லாம்
நாம் என்ப‌து
ப‌ல‌ம் வாய்ந்த‌ ம‌ர‌க்க‌ட்டை
இல‌குவில் உடையாது.
« Last Edit: March 02, 2012, 12:41:19 AM by thamilan »

Offline Global Angel

Re: நான் என்ற அகங்காரம்
« Reply #1 on: March 02, 2012, 12:19:08 AM »
நான் என்ற ஆணவம் பற்றி நல்ல அருமையான கவிதை தமிழன் ..... 
                    

Offline ooviya

Re: நான் என்ற அகங்காரம்
« Reply #2 on: March 02, 2012, 02:31:08 AM »
நான் சுயநலவாதியும் இல்லை
நான் அகங்காரம் பிடித்தவளும் இல்லை

ஆனால் "நான்" நானாகவே இருக்க விரும்புகிறேன்

"நாம்" என்ற இந்த சமுத்திரத்தில் கால் எடுத்து வைக்க எனக்கு நம்பிக்கை இல்லை

தமிழன் உங்க கவிதை படிக்க நன்றாக இருக்கிறது
ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு க்கு ஒத்து வராது

கண்களே ஆண்களை நம்பாதே


Offline thamilan

Re: நான் என்ற அகங்காரம்
« Reply #3 on: March 02, 2012, 08:16:35 AM »
ஓவியா
நான் சொன்னதின் அர்த்தம் வேறு. நீங்கள் நீங்களாகவே தான் இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் ஓவியா.
உங்கள் முகவரி நீங்கள் நீங்களாக இருப்பது தான்.
நான் சொன்ன நான் வேறு.
தனிமரம் தோப்பாகது. தனிமனிதனும் சமுதாயமாக மாட்டான். என்று நீங்கள் குடும்பம் குழந்தைகள் என்று ஆகிவிட்டீர்களோ அன்றே நீங்கள் நான் அல்ல, நாமாகி விட்டீர்கள். நீங்கள் மிஸ் ஓவியாவாக இருந்ததை விட மிஸ்ஸிஸ் ஓவியா தான் உஙளுக்கு பலமும் பாதுகாப்பும்.
நான் சொன்னதின் அர்த்தம் உ ங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

Offline ooviya

Re: நான் என்ற அகங்காரம்
« Reply #4 on: March 02, 2012, 06:34:37 PM »
nandraaga purindadhu tamilan  ;D
கண்களே ஆண்களை நம்பாதே