வீதியில் சென்று கொண்டிருந்தேன்
திடீரென பனிக்காற்று வீசியது.
இந்தக் கோடையில் எப்படி
குளிர்காற்று புரியவில்லை எனக்கு
திடீரென மின்னல் வெட்டியது போல
ஒரு ஒளிப் பிரவாகம்.
இடியும் இல்லை மழையும் இல்லை
கருமேகங்களும் இல்லை
எப்படி மின்னல் வந்ததது
புரியவில்லை எனக்கு
வீதியில் போவோர்
எல்லோர் முகத்திலும் பிரகாசம்.
ஏதோ கடவுளை கண்டது போல.
கடவுள் இருக்கிறானா இல்லையா என
குழம்பித் தவிக்கும் இந்த உலகில்
இறைவன் எப்படி வந்தான்
புரியவில்லை எனக்கு.
அதோ என்னவள்
வந்து கொண்டிருக்கிறாள்.