இயல்பிலேயே இளகிய இதயத்தோடு பிறந்து
இளகிய இதயம் கொண்டவர்களோடு வளர்ந்தவளுக்கு
கொஞ்சம் திடமான வலிமையான இதயம்
கொண்டவர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு தானே ?
அதுவுமின்றி , இந்த இளம் வயதிலேயே
தனிமையில் இனிமை காண்பவரான ஒருவரை
எப்படியேனும் சகஜபடுத்த, அவள் கையாண்ட
சமயோசித யுக்தியோ என்னவோ ?
அதை சரியாக புரிந்திடாமல் ,
உதாசினபடுத்தியதாய் எண்ணிக்கொண்டு
அவசரகதியில் துறவறம் பூண தயாரானால்
கல்லுக்கும் கரிசனம் வருமே ..
நீ காதலித்தவளுக்கு வந்ததில் வியப்பென்ன ??