வெகு காலங்களுக்குப் பிறகு உறக்கம்
என் கண்களை தழுவியது
தாய் மடியில் உறங்குகிற குழந்தையை போல
நிம்மதியான உறக்கம்
தந்தை தோலில் உறங்கும் போது
பாதுகாப்பில் இருக்கும்
நிம்மதியான உறக்கம் போல உணர்ந்தேன்
என்னவனே இவை அனைத்தும் உன்னாலே தான்
நீ என் அருகில் இருந்தால் நிம்மதியான
உறக்கம் என்னை தினமும் தழுவும்