உன் விரல் பிடித்து நடக்க ஆசை
உன் மூச்சை சுவாசிக்க ஆசை
உன் இதயமாக நன் இருக்க ஆசை
உன் இரும்பு கரகளில் அரவணைப்பில் வாழ ஆசை
என் விழியால் உன்னை சிறை எடுக்க ஆசை
உன் மார்பில் முகம் புதைக்க ஆசை
உன் செல்ல சீண்டல்களை ரசிக்க ஆசை
உன் இதழ் என் பெயரை உச்சரிப்பதை கேட்க ஆசை
உன் செல்ல சினுகளை என் செவிக்குள் ஒலித்து வைத்து கொள்ள ஆசை
உன் நினைவுகளை எனக்குள் ஓட விட ஆசை
உன் கனவுக்குள் நான் இருக்க ஆசை
உன் குடி நீராக ஆசை
உன்னை தீண்டும் தென்றலாக ஆசை
உன்னை தொட்டு விளையாடும் மழையாக மாற ஆசை
உன் கணுக்குள் கரு விழியாக ஆசை
உன் பாதநியாக மாற ஆசை
உன் மொழியாக ஆசை
உன் குரலாக ஆசை
உன் பார்வையாக ஆசை
உன் இதழில் உறவாடும் புன்னகையாக மாற ஆசை
நீ நானாக ஆசை
நான் நீயாக ஆசை
மொத்தத்தில் 1 உடல் 1 உயிராக ஆசை