Author Topic: சிறுநீரக கல்லைத் தடுக்கும் எலுமிச்சை!  (Read 1094 times)

Offline Yousuf


சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சாதாரண எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகைகள் உள்ளன. சிட்ரிக் அமிலம் இருக்கும் பழங்கள், சிட்ரஸ் பழ வகைகள்  என அழைக்கப்படுகின்றன. சிட்ரஸ் பழ வகைகளில் எலுமிச்சை, சாத்துக்குடி யில்தான் சிட்ரஸ் அதிகமாக உள்ளது.

உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரகக் கல் உருவாவதில் உள்ள பலவித காரணிகளில் முதன்மைக் காரணியாக உள்ளது. நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும்  உப்பு, கால்சியத்தின் பாதிப்பைக் குறைக்க எலுமிச்சை சாறு உதவுகிறது.

அமெரிக்காவில் சாண்டியாகோ வில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் எலுமிச்சை சாற்றை அதிக அளவில் தண்ணீருடன் கலந்து குடிப்பவர் களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் சேர்  வதற்கான வாய்ப்புக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டும் அன்றாடம் எலுமிச்சைச் சாறு அருந்துவதன் மூலமும், சிறுநீரகக் கற்களே  உருவாகாமல் முழுமை யாகத் தடுக்கலாம்.

Offline RemO

நல்ல பயனுள்ள தகவல் யூசுப்
இங்கு என் நண்பர்கள் பலர் சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுளனர் அவர்களுக்கு இது உதவும்

நன்றி யூசுப்

Offline Yousuf

நன்றி ரெமோ!