Author Topic: ஒருவழிப்பாதை¨¨  (Read 815 times)

Offline Global Angel

ஒருவழிப்பாதை¨¨
« on: February 27, 2012, 12:04:32 AM »
ஒருவழிப்பாதை¨¨

 
அழுத்தம் வேண்டாமென
அறைக்கதவை
திறந்து வைத்தேன்
இருட்டு வேண்டாம்
என்று
தீபமொன்றை
ஏற்றி வைத்தேன்

உள்ளே நீ
வருவாய் என்று
நிச்சயமாய்
நான் அறியேன்
கனம் எனக்கு
தாங்காது
உத்தமம் நீ
வெளியேறு

அடுத்தவரின் அறைக்குள்ளே
அனுமதியின்றி
நுழைவதெல்லாம்
மதி கெட்ட
வேலையென்று
சொல்லாமல்
அறியாயோ

வெளியேறும் வழி
அறியேன்
என்று சொல்லி
என்னுள் நீ
காலமெல்லாம்
கனக்கின்றாய்