தைரியம் என்பது...
கோபத்தில் பிறரை
வேதனை படுத்துவது அல்ல!
தைரியம் என்பது...
மானை வேட்டையாடும்
சிங்கத்தின் உறுமல் அல்ல!
தைரியம் என்பது...
கட்டிடத்தின் மூலையில்
வலை பின்னும் சிலந்தியின்
பொறுமையை போன்றது!
இன்னல்களை பொறுமையோடு
எதிர்கொள்ளும் துணிச்சலே
தைரியம்!