Author Topic: ஆனந்தக கண்ணீர்  (Read 707 times)

Offline thamilan

ஆனந்தக கண்ணீர்
« on: February 25, 2012, 05:03:07 PM »
புன்ன‌கையை க‌ண்டால்
சந்தோச‌ப்ப‌டும் நாம்
க‌ண்ணீரை க‌ண்டால்
க‌ல‌ங்கி நிற்ப‌து ஏன்

க‌ண்ணீரில் புன்ன‌கையும்
புன்ன‌கையில் க‌ண்ணீரும்
க‌ல‌ந்திருப்ப‌தை நாம் அறியோமோ

அதிக‌ம் சிரிக்கும் போது
க‌ண்ணீர் வ‌ருவ‌தில்லையா
ஆன‌ந்த‌க் க‌ண்ணீர்

உண்மையை சொல்ல‌தென்றால்
க‌ண்ணீர் க‌ண்க‌ளின் புன்ன‌கை
புன்ன‌கை இத‌ழ்க‌ளின் க‌ண்ணீர்
ந‌ம் இத‌ழ்க‌ள் சோக‌மாக‌ சிரிப்ப‌தில்லையா

புன்ன‌கை த‌ன்னை
க‌ண்ணீரால் அழ‌ங்க‌ரித்துக் கொள்ளும்
அற்புத‌ம‌ல்ல‌வா ஆன‌ந்த‌க் க‌ண்ணீர்

ம‌ழைமேக‌ங்க‌ளில்
மின்ன‌ல் உதிப்ப‌தில்லையா
அதே அழ‌கு தானே
க‌ண்ணீரினிட‌யே உதிக்கும் சிரிப்பும்

க‌ண்ணீரில் ம‌ல‌ரும்
புன்ன‌கை பூக்க‌ள் வாடுவ‌தில்லை

மேலும் க‌ண்ணீர்
உன் ம‌ன‌தை அடையாள‌ம் காட்டுகிற‌து
புன்ன‌கை
உன் ம‌ன‌துக்கு
திரை போடுகிற‌து

Offline Global Angel

Re: ஆனந்தக கண்ணீர்
« Reply #1 on: February 25, 2012, 05:11:42 PM »
புன்னகை கண்ணீர் உடன் பிறந்த சகோதரிகளாக இருக்குமோ .... நல்ல கவிதை தமிழன் ..... கண்ணீருக்குள் தோன்றும் புன்னகையின் அழகு தனி அழகுதான் ...